உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே கந்து வட்டி புகாரில் வாலிபர் கைது

Published On 2022-08-05 15:42 IST   |   Update On 2022-08-05 15:42:00 IST
  • ரூ.50 ஆயிரம் கடனுக்கு வட்டி சேர்த்து ரூ.1 லட்சம் தரவேண்டும் என்று அருளை தொந்தரவு செய்துள்ளார்.
  • மோட்டார்சைக்கிளையும் பறித்து சென்று விட்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீஸ் சரகம் பெரமலூர் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 35). இவர் தங்கவேல் மற்றும் அவரது மகன் துரை ஆகியோரிடம் ரூ,50 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார்.

அந்த பணத்தை கடந்த 2017-ல் ரூ.30 ஆயிரம் மற்றும் 2022-ல் ரூ.20 ஆயிரம் என்று 2 தவணையில் திருப்பிக்கொடுத்துள்ளார். ஆனால் ரூ.50 ஆயிரம் கடனுக்கு வட்டி சேர்த்து ரூ.1 லட்சம் தரவேண்டும் என்று அருளை தொந்தரவு செய்ததுடன் அவரது மோட்டார்சைக்கிளையும் பறித்து சென்று விட்டனராம்.

இது குறித்து அருள் தந்த புகாரின்பேரில் மத்தூர் போலீசார் கந்து வட்டி தடை சட்டப்படி தங்கவேல், துரை 2பேர் மீதும் வழக்கு பதிந்து துரையை கைது செய்தனர்.

Tags:    

Similar News