உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
- இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
- ஆத்திரம் அடைந்த நாராயணன், குமரனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கண்ணுகானூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் குமரன் (வயது26). அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் நாராயணன் (23).
மரம் ஏறும் தொழிலாளியான இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் பிரச்சினை இருந்து வந்தது.
கடந்த 19-ந்தேதி அன்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாராயணன், குமரனை சரமாரியாக தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த குமரன் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நாராயணனை கைது செய்தனர்.