உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே வாலிபருடன் இளம்பெண் ஓட்டம்- கணவர் போலீசில் புகார்
- கடந்த மாதம் 11-ந்தேதியன்று வீட்டை விட்டு சென்ற சித்ரா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
- அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற வாலிபருடன் சித்ரா சென்றது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி.
ஓசூர் டவுன் போலீஸ் சரகம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சித்ரா (வயது 23)கடந்த மாதம் 11-ந்தேதியன்று வீட்டை விட்டு சென்ற சித்ரா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதையடுத்து பல்வேறு இடங்களிலும் சதீஷ் தேடிப்பார்த்ததும் சித்ரா குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற வாலிபருடன் சித்ரா சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசில் சதீஷ் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சித்ராவையும், பாலமுருகனையும் தேடி வருகின்றனர்.