உள்ளூர் செய்திகள்
கல்லாவி அருகே பிறந்து 13 நாளே ஆன பெண் குழந்தை திடீர் சாவு -தாய் புகாரால் பிரேத பரிசோதனை
- 13 நாளே ஆன பெண் குழந்தை ஒன்று திடீரென இறந்து விட்டது.
- லாவண்யா கல்லாவி போலீசில் குழந்தையின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகேயுள்ள ஒன்னக்கரை பகுதியை சேர்ந்தவர் லாவண்யா (வயது 23). இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் உள்ளன.
இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பிறந்து 13 நாளே ஆன பெண் குழந்தை ஒன்று திடீரென இறந்து விட்டது.இது குறித்து அதிர்ச்சியடைந்த லாவண்யா கல்லாவி போலீசில் குழந்தையின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.