சூளகிரி அருகே ரூ.2.30 லட்சம் குட்கா, மதுபாட்டில்கள் காருடன் பறிமுதல்
- கொத்தூர் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு கார் இருந்தது.
- ஒன்றரை கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருடக்ள் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1,362 ஆகும்.
சூளகிரி,
சூளகிரி போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிள்ளை கொத்தூர் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு கார் இருந்தது.
போலீசார் அந்த காரை திறந்து சோதனை செய்த போது அதில் ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள 370 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களும், ரூ.4 ஆயிரத்து 800 மதிப்புள்ள கர்நாடக மாநில 48 மதுபாட்டில்களும் இருந்தன. அவற்றையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்ற நபரை சோதனை செய்தனர்.
அதில் அவர் ஒன்றரை கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருடக்ள் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1,362 ஆகும். அதை வைத்திருந்த கோவை பேரூர் சுண்டகாமுத்தூரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
இதே போல ஊத்தங்கரையில் 4 ரோடு, கொண்டம்பட்டிபுதூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கோணம்பட்டி ரவி (49), கொண்டம்பட்டிபுதூர் பத்மா (55) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17 பாக்கெட் ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.