உள்ளூர் செய்திகள்

திட்ட பணிகளை சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தொடங்கி வைத்தார்.

சூளகிரி அருகே ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

Published On 2022-08-12 14:41 IST   |   Update On 2022-08-12 14:41:00 IST
  • சூளகிரி கிராமத்தில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் பைப்லைன் அமைக்கும் பணி.
  • பணியை ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தொடங்கி வைத்தார்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், வேப்பனஹள்ளி தொகுதிக்கு உள்பட்ட சின்னாறு கிராமத்தில் சுமார் ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கு ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்செல்வி ராஜாராம் தலைமையில் தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

பொன்னப்பா செட்டியார் வீடு முதல் ராமன்னா வீடு வரை ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும், மாணிக்கம் செட்டியார் வீடு முதல் ராமசந்திரன் வீடு வரை ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும், சூளகிரி கிராமத்தில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் பைப்லைன் என ஆகிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்னண், கவுன்சிலர் தமிழ்செல்வி ராஜாராம், பொறியாளர் சுமதி, ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், ஒப்பந்ததாரர் லோகேஷ் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

Tags:    

Similar News