உள்ளூர் செய்திகள்
பர்கூர் அருகே தடுப்பு சுவரில் கார் மோதி ரெயில்வே அதிகாரி பலி
- கார் நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
- சம்பவ இடத்திலேயே தீபக் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது38). இவர் ஜோலார்பேட்டை ரெயில்வேயில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.
நேற்று தனது காரில் தீபக் புறப்பட்டு கிருஷ்ணகிரி-சென்னை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்ேபாது உப்பளவாடி என்ற இடத்தின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கார் நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.