தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி- நீலகிரி கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்
- நாடு முழுவதும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது
- பேரணியில் ஊட்டச்சத்து பணியாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ஊட்டி,
நாடு முழுவதும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்ஒருப குதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ-மாணவிகள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது சேரிங்கிராஸ் வழியாக காபிஹவுஸ் சென்ற டைந்தது.
முன்னதாக மகளிர் சுயஉதவிக்குழுவினரின் விழிப்புணர்வு ரங்கோலி கோலம், வளரிளம் பெண்களுக்கான ரத்தசோதை முகாம் ஆகியவற்றையும் கலெக்டர் அருணா பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் மருந்துதுறை சார்பில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு விட்ட மின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இது வருகிற 23-ந்தேதி வரை மாவட்டம் முழுவதும் நடக்க உள்ளது.
நிகழ்ச்சியில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பாலுசாமி, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரி தேவகுமாரி, மாவட்ட சமூகநல அலுவலர் பிரவீணாதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி (பொ) ஷோபனா, வட்டார மருத்துவ அலுவலர்கள் முருகேசன், ஊட்டி தாசில்தார் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.