உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடைபெற்றபோது எடுத்த படம்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-01-28 15:14 IST   |   Update On 2023-01-28 15:14:00 IST
  • தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இப்பேரணியை எடப்பாடி ஒன்றிய செயலா–ளர், அட்மா குழு தலைவர் நல்லதம்பி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் இருப்பாளி மற்றும் வேம்பனேரி, சித்தூர், வெள்ளிரிவெள்ளி, செட்டிமாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் நடந்தது.

இப்பேரணியை எடப்பாடி ஒன்றிய செயலாளர், அட்மா குழு தலைவர் நல்லதம்பி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்தப் பேரணியில் சிறு–தானிய ஆண்டு 2023 கொண்டாடப்படும் நோக்கம், அதன் நன்மைகள், சத்துமிக்க சிறுதானிய உணவுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் பொள்ளாச்சி வானவராயன் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளும் பங்கேற்று தேசிய உணவு பாதுகாப்பு சம்பந்தமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணியில், எடப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் மணிவாசகம் சிறுதானிய சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி எடுத்துரைத்தார். மேலும் இப் பேரணியில் வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவ–லர்கள் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்போட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News