முக்கூடலில் நாராயணசாமி கோவில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- இந்தாண்டு திருவிழா 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திருவிழாவை முன்னிட்டு தினசரி பகலில் நாராயணனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
முக்கூடல்:
முக்கூடலில் உள்ள பிரசித்தி பெற்ற நாராயணசாமி கோவில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 5 மணிக்கு வருஷாபிஷேகம், கோபுர கொடியேற்றம் நடைபெற்றது. பகல் 1 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாராயணர் ஊர்வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.
பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழா 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு தினசரி பகலில் நாராயணனுக்கு சிறப்பு பூஜையும், அதனைத் தொடர்ந்து அன்ன தர்மமும், மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரி ஊர்வலமாக வரும். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜையும், இரவில் நாராயணர் சப்பர பவனியும், தினசரி இரவில் அன்னதானமும் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் இரவில் முக்கூடல் முத்தமிழ் பேரவையின் இலக்கிய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.