உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் யோகநரசிம்ம பெருமாள்.

யோகநரசிம்ம பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா

Published On 2023-05-05 15:36 IST   |   Update On 2023-05-05 15:36:00 IST
  • நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் இடையில் புருவ மத்தியில் அக்னி (நெற்றிக்கண்) உள்ளது.
  • 9 சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் எண்ணியவை எண்ணியபடி நடக்கிறது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அடுத்த வல்லத்தில் யோக நரசிம்மப் பெருமாள் கோவில் உள்ளது.

யோக நரசிம்மர் இங்கு சுயம்பு மூர்த்தி ஆவார். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் இடையில் புருவ மத்தியில் அக்னி(நெற்றிக்கண்) உள்ளது.

நரசிம்மர் மனித உடலும் சிங்க முகமும் கொண்டவர் என்பதால் இக்கோவிலில் யோக நரசிம்மர் கல், சுதை இரண்டும் கலந்து யோக நரசிம்மராக பக்தர்களுக்கு இங்கு காட்சி தருகிறார்.

இவருக்கு தைலக்காப்பு மட்டுமே சாற்றுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இது போன்ற அமைப்புகள் உடைய யோக நரசிம்மர் இவர் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதி மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று காலையில் ஹோமமும் அபிஷேகமும் நடைபெறுகிறது.

தொடர்ந்து ஒன்பது சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் எண்ணியவை எண்ணியபடி நடக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

இந்த நிலையில் இன்று நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை 6.30மணிக்கு உற்வர் லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் விஷேட திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சுதர்சன ஹோமம் நடைபெற்றது.

இதில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு யோக நரசிம்மப் பெருமாளை தரிசனம் செய்தனர்.

இன்று மாலையில் யோக நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனை நடைபெறும்.

இந்த விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் பட்டர்கள் மற்றும் சுவாதி கைங்கர்ய குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News