உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்

Published On 2023-06-23 10:11 IST   |   Update On 2023-06-23 10:11:00 IST
  • கடந்த 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டுத் தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.
  • மதுபான சில்லரை விற் பனைக் கடை அருகே கள்ள மார்க்கெட்டில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சுந்தர்ராஜன் என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கமலக் கண்ணன் தலைமையில் கலால்துறை உதவி கமிஷனர் மற்றும் போலீசாருடன் கடந்த 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டுத் தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.

அப்போது மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த பரமத்திவேலூர், மோகனூர், செங்கப்பள்ளி, கபிலர்மலை, திம்மநாய்க்கன் பட்டி, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, மெட்டாலா மற்றும் செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை பணியாளர்களுக்கு ரூ.70 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அனுமதியின்றி இயங்கி வந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட்டன. மதுபான சில்லரை விற் பனைக் கடை அருகே கள்ள மார்க்கெட்டில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சுந்தர்ராஜன் என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

மேலும், கடை மேற் பார்வையாளர் சுப்புராஜா மற்றும் விற்பனையாளர் செல்வராஜ் ஆகியோர் மீது போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை யொட்டி 2 பணியாளர்கள் தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News