உள்ளூர் செய்திகள்

மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-21 07:44 GMT   |   Update On 2023-07-21 07:44 GMT
  • கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசு கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரம்உயர்த்தி தரக் கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசா யிகள் கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெயின் கேட் முன்பு தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசு கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரம்உயர்த்தி தரக் கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மணப்பள்ளி பெருமாள் தலைமை வைத்தார். முன்னாள் மாநில விவசா யிகள் சங்கத் தலைவர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு கரும்பு விவசா யிகள் சங்க மாவட்ட செய லாளர் பெருமாள், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு இயக்குனர் தனலட்சுமி பாலசுப்ர மணியம் ,தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ராமநாதன், பாலு, சேகர், நாமக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் ஜோதி ,சதாசிவம், ராஜேந்திரன், தங்க ரத்தினம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஜேடர்பாளையம் கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசா யிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News