உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரன் சாலை பாதுகாப்பு குறித்து பேசிய போது எடுத்த படம். 

மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Published On 2023-06-23 07:04 GMT   |   Update On 2023-06-23 07:04 GMT
  • ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் சார்பில் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரன் தலைமை தாங்கி பேசினார்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் சார்பில் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரன் தலைமை தாங்கி பேசினார். சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மோனிகா வரவேற்றார்.

செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை ஓட்டிச் செல்லக்கூடாது. 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனத்தை ஓட்டி சென்றால் அவர்களது பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும். குடிபோதையில் வாகனத்தை ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்லக்கூடாது. ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து செல்லக்கூடாது போன்றவற்றைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News