உள்ளூர் செய்திகள்

முட்டை விலை மேலும் உயரும்

Published On 2023-08-13 08:32 GMT   |   Update On 2023-08-13 08:32 GMT
  • நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
  • கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இங்கு உற்பதத்தி செய்யப்படும் முட்டைகள் சத்துணவு மற்றும் உள்மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. வடமாநிலங்களில் உற்பத்தி குறைவால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை அதிகளவில் செல்கின்றன.

இது மட்டுமின்றி துபாய், மஸ்கட், இலங்கை உள்பட பல்வேறு வெளிநா டுகளுக்கு முட்டைகள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணை யாள ர்கள் சங்க தலைவர் சிங்க ராஜ் கூறியதாவது:-

நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் வடமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது. மழைகாரணமாக நுகர்வு அதிகம் உள்ளதால் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News