அரசமர பிள்ளையார், மாசி பெரியண்ணசாமி, கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம்
- நன்செய்இடையாறு காவிரி ஆற்றின் வடகரை யில் அமைந்துள்ள அரசமர பிள்ளையார், மாசி பெரி யண்ணசாமி மற்றும் கன்னி மார் கோவில் மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.
- விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 8- மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யா கம் கணபதி ஹோமம், நவநாயகர் யாகம், மகாலட்சுமி யாகம் மற்றும் பூர்ணாகுதி யும், மாலை 5- மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய்இடையாறு காவிரி ஆற்றின் வடகரை யில் அமைந்துள்ள அரசமர பிள்ளையார், மாசி பெரி யண்ணசாமி மற்றும் கன்னி மார் கோவில் மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 8- மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யா கம் கணபதி ஹோமம், நவநாயகர் யாகம், மகாலட்சுமி யாகம் மற்றும் பூர்ணாகுதி யும், மாலை 5- மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் நடைபெற்றது.
மாலை 6- மணிக்கு வாஸ்து பூமி பூஜை, கும்ப அலங்காரம், முதல் காலயாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், மருந்து சாத்துதலும் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மேல் இரண்டாம் காலயாக பூஜை, சபர்சாகுதி, தீபாராதனை யும், 7 மணிக்கு மேல் அரசமர விநாயகர், மாசி பெரியண்ண சாமி மற்றும் கன்னிமார்கள் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
அதனைத் தொடர்ந்து மகா அபிஷே கம், தசதானம், கோபூஜை நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்க ளுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நன்செய்இடையாறு மற்றும் சுற்று வட்டார பகு திகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை நன்செய் இடையாறு மாசி பெரியண்ணசாமி கோவில் பரம்பரை அறங்கா வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.