உள்ளூர் செய்திகள்

போலீஸ் துறையில் பயன்படுத்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏலம்

Published On 2023-10-11 09:00 GMT   |   Update On 2023-10-11 09:00 GMT
  • சார்பு உபகரணங்கள் தற்போது வலுவடைந்ததின் அடிப்படையில் கழிவு நீக்கம் செய்வதற்காக வரும் 17-ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.
  • இதற்காக கழிவு பொருட்கள் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட போலீஸ் துறையில் தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ், அதன் சார்பு உபகரணங்கள் தற்போது வலுவடைந்ததின் அடிப்படையில் கழிவு நீக்கம் செய்வதற்காக வரும் 17-ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது. இதற்காக கழிவு பொருட்கள் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. ஏலத்தில் அரசு விதிகளின் வழிகாட்டுதலுக்கு இணங்க தகுதிச் சான்று உள்ள நிறுவனங்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேலும் ஏலத்தில் பங்கேற்று கழிவு பொருட்களை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகை முழுவதையும் மற்றும் அப்பொருளுக்கு உண்டான ஜி.எஸ்.டி. தொகையுடன் செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

Tags:    

Similar News