உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் நாளைமின்கட்டண உயர்வை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

Published On 2023-09-24 08:04 GMT   |   Update On 2023-09-24 08:04 GMT
  • தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 430 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • பீக் ஹவர் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் கோஸ்டல் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

430 சதவீதம் உயர்வு

தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 430 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பீக் ஹவர் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

சோலார் மேற்கூரை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். வெல்டிங் உள்ளிட்ட மின் இணைப்பு களுக்கு டேரிப் மாற்றம் செய்து தர வேண்டும்.

மல்டி இயர் டேரிப் கட்டணத்தை ரத்து செய்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் உயர்வை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நாளை 25-ந் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு நாமக்கல் மாவட்ட சிறு, குறுந்தொ ழில்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

கடையடைப்பு

இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கலந்துகொண்டு கடை யடைப்பு செய்ய உள்ளனர்.

நாமக்கல் மாவட்ட பாடி பில்டர்கள் சங்கம், கண்ணாடி கடை அசோசி யேசன், சேகோ பேக்டரி உரிமையாளர்கள் சங்கம், தேங்காய் நார் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சுமார் 2,500 சிறு, குறந்தொழில்கள் சங்கத்தினர் தங்கள் நிறுவனங்களை நாளை ஒரு நாள் மூடி வைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News