உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தொடக்க விழா நடைபெற்றபோது எடுத்த படம்.

இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்காவிட்டால் போராட்டம்

Published On 2023-07-31 12:24 IST   |   Update On 2023-07-31 12:25:00 IST
  • இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தொடக்க விழா மற்றும் 10 வட்டாரங்களில் புதிய சங்க கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது.
  • 20 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களுக்கு, சம்பள விகிதம் நிர்ணயம் செய்த போது தவறுதலாக மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தொடக்க விழா மற்றும் 10 வட்டாரங்களில் புதிய சங்க கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது.

பதவி ஏற்பு

இதில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்ற னர். சங்க மாவட்டச் செய லாளர் சண்முகராஜ் நிகழ்ச் சிக்கு தலைமை வகித்தார்.

மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், மாநில பொதுச் செயலாளர் ராபர்ட், பொருளாளர் கண்ணன், துணைத்தலைவர் ஞானசேகரன், துணைச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை, நாமகிரிப் பேட்டை, கபிலர்மலை, புதுச்சத்திரம், திருச்செங் கோடு, எருமப் பட்டி, பள்ளி பாளையம் உள்ளிட்ட 10 வட்டாரங்களை சேர்ந்த கிளைகளின் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்ற னர்.

சம்பள வித்யாசம்

தொடர்ந்து சங்க மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட சுமார் 20 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களுக்கு, சம்பள விகிதம் நிர்ணயம் செய்த போது தவறுதலாக மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே பள்ளியில் பணி யாற்றும் ஒரே கல்வித்தகுதி கொண்ட ஆசிரியர்கள் இடையே மாத சம்பளத்தில் பெரும் வித்தி யாசம் உள்ள தால், நாங்கள் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளோம். இதை பல்வேறு போராட்டங்களின் வழியாக அரசுக்கு எடுத்துச் சென்றோம். ஆனால் அரசு அதை சரி செய்யவில்லை.

போராட்டம்

எனவே இடைநிலை ஆசிரியர்களின் சம்பள நிர்ணயத்தில் உள்ள குறை பாடுகளை களைய நட டிக்கை எடுக்கவே, நாங்கள் புதிய அமைப்பை தொடங்கி உள்ளோம். விரைவில் சங்க மாநாட்டை சென்னையில் நடத்தி, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். தமிழக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News