பொத்தனூர் ஸ்ரீ பொன்னாச்சியம்மன் கோவிலில் சிறப்பு லட்சார்சனை நடைபெற்ற போது எடுத்த படம்.
ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
- பொத்தனூரில் உள்ள பொன்னாச்சியம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பொன்னாச்சியம்மனுக்கு லட்சார்ச்சனை மற்றும் யாக வேள்வி நடந்தது.
- அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் உள்ள பொன்னாச்சியம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பொன்னாச்சியம்மனுக்கு லட்சார்ச்சனை மற்றும் யாக வேள்வி நடந்தது. கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதேபோல் பரமத்திவேலூர் பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன் ,கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.