உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் மத்திய அரசைகண்டித்து திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் தொண்டரணி இணை செயலாளர் ராணி பேசிய போது எடுத்த படம்

நாமக்கல்லில் தி.மு.க மகளிரணி ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-24 12:22 IST   |   Update On 2023-07-24 12:22:00 IST
  • இதுவரை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய மற்றும் மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசை கண்டித்து மகளிர் அணி சார் பில் நாமக்கல்- மோகனூர் சாலை பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஆர்ப்பாட்டதிற்கு மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி தலைமை வகித்தார்.

நாமக்கல்:

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில், மாதக் கணக்கில் பெண்கள் மீது கொடூர பாலியல் தாக்குதலும், உச்சகட்டமாக பெண் கள் அங்கு நிர்வாணப்ப டுத்தப்பட்டு பாலி யல் வன்கொடுமை செய்யப்பட்டதை, இதுவரை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய மற்றும் மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசை கண்டித்து மகளிர் அணி சார் பில் நாமக்கல்- மோகனூர் சாலை பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டதிற்கு மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி தலைமை வகித்தார். ராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதிலட்சுமி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தை கலவரத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் , மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், சார்பு அணி மகளிர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், வார்டு மற்றும் கிளைகழகமகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, நிர்வாகிகள்,மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News