- மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் பரமத்திவேலூர் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- சோதனையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவர்கள் கைது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் பரமத்திவேலூர் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சட்டவிரோதமாக வேலூர் 4 ரோடு, சந்தை பகுதி, செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் பாலப்பட்டி அருகே உள்ள செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் மது பாட்டில்களை விற்பனை செய்த வேலூர் கிழக்கு தெரு, தேர் வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (39), வேலூர் கந்த நகரை சேர்ந்த மோகன் (65) டிரைவர், பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையம், தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (48) மற்றும் பாலப்பட்டி அருகே உள்ள செங்கப்பள்ளியை சேர்ந்த பாரத் (29) ஆகிய 4 பேர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்களையும் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஸ்கூட்டர், ஒரு மொபட் உள்ளிட்ட 3 வாகனங்களையும் பறிமுதல் செய்து, தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.