உள்ளூர் செய்திகள்

பரமத்தி சிறையில் உள்ள 2 வாலிபர்களை காவலில் எடுத்து விசாரணை

Published On 2023-07-24 15:02 IST   |   Update On 2023-07-24 15:02:00 IST
  • நித்யா என்ற பட்டதாரி இளம்பெண் அருகில் உள்ள முள்காட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
  • அப்போது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையத்தை சேர்ந்த நித்யா என்ற பட்டதாரி இளம்பெண் அருகில் உள்ள முள்காட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்த 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே நித்யா படுகொலை சம்பவத்தை தொடர்ந்து ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்ட கைகளில் தீவைப்பு, வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பது, மின்மோட்டார்களை கிணற்றில் வீசுவது உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன. மேலும் வடமாநில தொழிலாளர்கள் மீது தீ வைத்த சம்பவமும் நடந்தது.

இந்நிலையில், இப்பகுதி யில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக வாலி பர்கள் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இவ்வாறு கைதாகி பரமத்தி சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்த சங்கர் (32), ஜேடர்பாளையம் அருகே வேட்டுவம் பாளை யத்தை சேர்ந்த நல்லசிவம் (32) ஆகிய 2 பேரிடமும் ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்த பரமத்தி நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

நீதிமன்றம் ஒரு நாள் விசாரணைக்கு மட்டும் அனுமதி அளித்தது. அதன் பேரில் சங்கர், நல்லசிவம் ஆகிய 2 பேரையும் விசார ணைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். நாள் முழுவதும் வேல கவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து ரகசியமாக தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் மேலும் யார், யார் இந்த அசம்பாவித சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்து கேட்டனர். விசாரணைக்கு பிறகு சங்கர், நல்லசிவம் இருவரையும் பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் பரமத்தி சப்-ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News