உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு விதிமுறையை கடைபிடிக்காத 10 பஸ்கள் இயக்க அனுமதி மறுப்பு

Published On 2023-05-26 13:06 IST   |   Update On 2023-05-26 13:06:00 IST
  • தாலுகா மற்றும் பரமத்தி வட்டார போக்கு வரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட தனி யார் பள்ளி வாக னங்களை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • அவற்றில் 180 பள்ளி வாக னங்கள் மட்டும் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது.

பரமத்திவேலூர்:

தமிழக அரசு உத்தரவுபடி வரும் ஜூன் மாதம் பள்ளி கள் திறக்கப்படுகின்றன. இதையெட்டி பரமத்தி வேலூர் தாலுகா மற்றும் பரமத்தி வட்டார போக்கு வரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட தனி யார் பள்ளி வாக னங்களை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கந்தம்பாளையம் தனி யார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த ஆய்வில் வருவாய்த்துறை. பள்ளிக் கல்வித் துறை, போலீசார் மற்றும் போக்கு வரத்து துறை அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அவற்றில் 180 பள்ளி வாக னங்கள் மட்டும் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது.

மீதமுள்ள 10 பள்ளி வாகனங்கள் குறைகளை கண்டறியப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பின் இயக்க வேண்டும் என ஆர்.டி.ஓ. கவுசல்யா அவற்றை திருப்பி அனுப்பினார்.

இந்த ஆய்வின் போது நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், பரமத்தி மோட்டார் வாகன ஆய்வா ளர் சரவ ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவல ரின் உதவி யாளர் கோபால கிருஷ்ணன் உடன் இருந்தனர். மேலும் 204 பள்ளி பஸ் டிரைவர் மற்றும் உதவியா ளர்களுக்கு இலவச கண் பரிசோதனையும், உடல் பரி சோதனையும் மேற்கொ ள்ளப் பட்டது. பள்ளி டிரைவர்க ளுக்கு வாகனம் ஓட்டும்போது சாலையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் சரவ ணன் விளக்கம் அளித்தார்.

Tags:    

Similar News