உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே காப்பர் கம்பியை திருடிய மர்ம நபர்கள்
- டிரான்ஸ்பார்மரை உடைத்து 15 கிலோ காப்பர் கம்பியை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
- திருடு போன காப்பர் கம்பி சுமார் 50 ஆயிரம் ஆகும்.
கடலூர்:
கடலூர் அடுத்த பூவாணிக்குப்பம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் இருந்து வருகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று மின்சார துறைக்கு சொந்தமான டிரான்ஸ்பார்மரை உடைத்து 15 கிலோ காப்பர் கம்பியை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். இத்தகவல் அறிந்த மின்சார துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருடு போன காப்பர் கம்பி சுமார் 50 ஆயிரம் ஆகும். பின்னர் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் ஆலப்பாக்கம் மின்சார துறை உதவி பொறியாளர் மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.