உள்ளூர் செய்திகள்

கடலூர் அரசு மருத்துவமனையில் வெட்டுப்பட்ட காவலாளி முருகையன் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டு உள்ள காட்சி.

கடலூர் அருகே காவலரை மண்வெட்டியால் வெட்டிய மர்ம நபர்கள்

Published On 2022-11-10 13:34 IST   |   Update On 2022-11-10 13:34:00 IST
  • இன்று அதிகாலை முருகையன் தலையில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்தார்.
  • இரும்பு கடைக்குள் நுழைந்து பொருட்கள் திருட முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கடலூர்:

கடலூர் அருகே குமராபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் எதிர்புறத்தில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை உள்ளது. இங்கு குமராபுரம் சேர்ந்த முருகையன் (வயது 59) என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை முருகையன் தலையில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நெல்லிக்கு ப்பம் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து முருகையனை சிகிச்சை க்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் முருகேசன் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிருக்கு மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். இந்த நிலையில் பழைய இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் யாராவது திருடவந்த போது காவலர் முருகையன் தடுத்த போதுஅங்கிருந்த மண்வெட்டியால் தலையில் வெட்டிவிட்டு தப்பி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்கு வெட்டினா ர்களா? என்பதனை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் ஆஞ்சநேயர் கோவில், அம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததும், மேலும் பழைய இரும்பு கடைக்குள் நுழைந்து பொருட்கள் திருட முயற்சி செய்தது குறிப்பி டத்தக்கதாகும்.

இதனை தொடர்ந்து பழைய இரும்பு பொருள் வாங்கும் கடைக்கு காவலராக முருகையன் இருந்த நிலையில் மர்ம நபர்கள் கொலைவெறியுடன் தலையில் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடலூர் , நெல்லிக்குப்பம் பகுதிகளில் பெண்களிடமிருந்து செயின் பறிப்பு மற்றும் கடைக்கு காவலராக பணிபுரிந்து வந்த முருகேசன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி சென்ற சம்பவம் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது. 

Tags:    

Similar News