உள்ளூர் செய்திகள்
திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
- நிலத்திற்கு சென்று வேலை செய்துவிட்டு பின்னர் வீட்டிற்கு செல்வதாக மோட்டார் சைக்கிள் எடுக்க வந்தார்.
- காரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே கரடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 31) இவர் அதே பகுதியில் உள்ள இவரது நிலத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு நிலத்திற்கு சென்று வேலை செய்துவிட்டு பின்னர் வீட்டிற்கு செல்வதாக மோட்டார் சைக்கிள் எடுக்க வந்தார். அப்போது சாலை ஓரமாக நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மாயமானது. இதைப் பார்த்து அதிர்ச்சடைந்து இது குறித்து செல்வகுமார் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.