உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் மோட்டார் சைக்கிள் திருட்டு
- பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.
- திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள காச வளநாடு புதூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அப்பர் (வயது 52 ). சம்பவத்தன்று இவர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த இவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து அவர் தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.