வாசுதேவநல்லூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
- முனியாண்டியும், குருசாமியும் மோட்டார் சைக்கிளில் வாசுதேவநல்லூருக்கு சென்று கொண்டு இருந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முனியாண்டி படுகாயம் அடைந்தார்.
நெல்லை:
சிவகிரி அருகே ராமநாதபுரம் செம்புலிங்கர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 36).
இவரும் திருமலாபுரத்தை சேர்ந்த குருசாமி என்பவரும் கடந்த 23-ந் தேதி இரவில் மோட்டார் சைக்கிளில் வாசுதேவநல்லூருக்கு சென்று கொண்டு இருந்தனர்.
வாசுதேவநல்லூர் அருகே சென்ற போது சாலையோரம் இருந்த வேப்பமரத்தின் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயங்களுடன் குருசாமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முனியாண்டி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி முனியாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.