விபத்தில் பலியான புதுமாப்பிள்ளை சதீஷ், புஷ்பா ஆகியோரை படத்தில் காணலாம்.
மோட்டார் சைக்கிள்- ஆட்டோ மோதல் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலி
- மோட்டார் சைக்கிள்- ஆட்டோ மோதல் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலி ஆகினர்.
- புதுப்பேட்டை அருகே கோணப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த ஆட்டோ மோதியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோட்லாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவரது மகன் சதீஷ் (வயது24) பெயிண் டர். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்தபெண்ணுக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பெண் வீட்டில் விருந்து முடித்துவிட்டு தன் வீட்டிற்கு செல்ல மோட்டார் சைக்கிளில் நேற்று வந்து கொண்டுஇருந்தார்.புதுப்பேட்டை அருகே கோணப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த ஆட்டோமோதியது. இந்த விபத்தில்புதுமாப்பிள்ளை சதீஷ் ஆட்டோவில் வந்த புஷ்பா (45) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
ஆட்டோவில் வந்த, பண்ருட்டி அருகே கட்டியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (38), சின்னப்பொன்னு (55), சிவகாமி (34), பரிமலா(27), நிஷாந்தி (28), மலர் கொடி(49), செண்பகம் (36), ஆட்டோ டிரைவர்அரிதாஸ் (24) ஆகிய 8 பே ர்காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.