உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2022-07-15 13:39 IST   |   Update On 2022-07-15 14:28:00 IST
  • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
  • புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்குறுச்சி:

சங்கராபுரம் அருகே ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் குமரேசன் (வயது 19). இவர் சம்பவத்தன்று அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வினோத்குமார் (22) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பகண்டை கூட்டுரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் ரெட்டியார்பாளையம் அருகே வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோவில் எதிரில் இருந்த ஜல்லிகள் மீது இருசக்கர வாகனம் ஏறியது. இதில் நிலை தடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த குமரேசன் சேலம் குமாரமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News