உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி

Published On 2022-09-10 13:02 IST   |   Update On 2022-09-10 13:02:00 IST
  • வாலிபர் தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
  • மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர மரத்தில் மோதியது.

திருத்தணி:

ஆவடி நாகாளம்மன் நகர் விநாயகர் தெருவில் வசிப்பவர் குட்டீஸ் (வயது21). இன்று காலையில் ஆவடியில் இருந்து பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜுபேட்டை காலனியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

சிறு குமி என்ற இடத்தில் மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர மரத்தில் மோதியது. இதில் குட்டீஸ் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News