உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகைக்கான ஆணையை சபாநாயகர் அப்பாவு வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் கார்த்திகேயன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன் உள்ளனர்.

வருவாய், பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 500 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை- சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

Published On 2023-05-06 14:53 IST   |   Update On 2023-05-06 14:53:00 IST
  • 22 மாதத்தில் 4.65 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
  • இதுவரை 1,440 ஆரம்ப பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை:

வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தமிழக அரசின் 2-ம் ஆண்டு சாதனையை முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை வழங்கும் விழா நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

மாதாந்திர உதவித்தொகை

கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ஐ வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

500 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை இன்று வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு பொறுப் பேற்றதில் இருந்து முந்தைய அரசு கிடப்பில் போடப்பட்ட பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்துள்ளது. அடிக்கல் நாட்டிய பணி களை உடனடியாக தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

22 மாதத்தில்

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 22 மாதத்தில் 4.65 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது சாதி சான்று மற்றும் வருமான சான்று உள்ளிட்டவை கேட்டு 4.38 லட்சம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர். தற்போது அவைகள் அனைத்தும் கொடுக்கப் பட்டு 785 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது.

வருவாய் துறை அதிகாரிகள் இரவு, பகல் பார்க்காமல் உழைத்ததின் காரணமாகவே அரசுக்கு பாராட்டுகள் கிடைத்து உள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு

அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வறுமையை கருத்தில் கொண்டு இது வரை 1440 ஆரம்ப பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பள்ளி களிலும் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செப்டம்பர் 15-ந்தேதி தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை) சுகன்யா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் குமார தாஸ் மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News