உள்ளூர் செய்திகள்

கச்சத்தீவை மீட்டு, இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு அமைக்க மோடி நடவடிக்கை எடுப்பார்- மதுரை ஆதீனம்

Published On 2025-04-06 12:49 IST   |   Update On 2025-04-06 13:10:00 IST
  • கச்சத்தீவை மீட்க ஆவண செய்வார்.
  • இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைந்திட ஆவணம் செய்வார்

மதுரை:

ராமேசுவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரெயில் பாலம் மற்றும் கப்பல்கள் கடந்து செல்ல செங்குத்தான தூக்கு பாலம் திறப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை ஆதீனம் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரெயில்வே பாலத்திற்கு பிறகு, தற்போது பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ரெயில்வே பாலம் பெருமைக்குரியது. இலங்கை தமிழர்களுக்கு என பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவித்திருந்தேன். அவை அத்தனையையும் நிறை வேற்றி இருக்கிறார்.

குறிப்பாக தமிழக மீனவர்கள் அத்தனை பேரையும் விடுதலை செய்ய வைத்துள்ளார். அவர்களின் படகுகளை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.

தொடர்ந்து இலங்கை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கும், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். அத்தனைக்கும் பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர். கச்சத்தீவு காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தாரை வார்க்கப்பட்டது. அப்போது துணை நின்றவர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை.

ஆனால் இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என பேசி வருகின்றனர். பிரதமர் கச்சத்தீவை மீட்டு தந்து, இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைந்திட ஆவணம் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

Tags:    

Similar News