உள்ளூர் செய்திகள்

மாணவி ஒருவருக்கு எம்.எல்.ஏ. மலர்களை பரிசளித்த காட்சி.


மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடிய எம்.எல்.ஏ.

Published On 2022-12-04 14:11 IST   |   Update On 2022-12-04 14:11:00 IST
  • முதல்-அமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை ரூ.1500 ஆக உயர்த்தி உள்ளார் என்று எம்.எல்.ஏ. பேசினார்.
  • மாற்றுத்திறனாளிகள் மீது முதல்-அமைச்சர் தீராத பற்று கொண்டு உள்ளதாகவும் எம்.எல்.ஏ. கூறினார்.

சுரண்டை:

சுரண்டை ஆலடிப் பட்டியில் உள்ள நிலா மனவளர்ச்சி குன்றிய இல்லத்திற்கு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பழனி நாடார் எம்.எல்.ஏ. சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை ரூ.1500 ஆக உயர்த்தி உள்ளார். மாற்றுத்திறனாளிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் சாய்வு தளம் அமைத்துள்ளார்.

ஊனமுற்றோர் என்ற வார்த்தையை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என அழைத்த பெருமை முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரையே சேரும்.மேலும் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளி குழந்தைகள் மீது தீராத பற்று கொண்டு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார். பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது முதல்-அமைச்சர் தீராத பற்று கொண்டு உள்ளார் என பேசினார்.

நிகழ்ச்சியில் பிரியா அழகுசுந்தரம், நிர்வாகி பால கணேஷ்,சிறப்பு ஆசிரியர் மதுபாலா,அமுதா, தெய்வேந்திரன்,ராஜ்குமார், செய்தி மாடசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News