உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்படவில்லை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2022-12-26 02:15 IST   |   Update On 2022-12-26 02:15:00 IST
  • செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
  • 368 கோடி ருபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவைக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேரு விளையாட்டு அரங்கில் 7 கோடி ரூபாய் செலவில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 368 கோடி ருபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: 


திமுக ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்று பத்திரிக்கை நண்பர்கள் நமது தலைவரிடம் ( மு.க.ஸ்டாலினிடம்) கேட்டார்கள். அப்போது பேசிய தலைவர், திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. வாக்களிக்காதவர்கள் வருந்தும் அளவிற்கு திமுக அரசு சிறப்பாக செயல்படும் என்று கூறியிருந்தார்.

கோவையில் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட திமுக இல்லையே என்று எல்லோரும் நினைத்தோம். கோவையை இந்த அரசு புறக்கணித்து விடும் என்று எல்லோரும் பேசினார்கள். திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்படும் என்று வெளியான ஊகங்களை பொய்யென்று முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் நிரூபித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News