உள்ளூர் செய்திகள்

உலக சாதனை புரிந்த மாணவிக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

பட்டுக்கோட்டையில் சாதனை புரிந்த மாணவிக்கு அமைச்சர் பாராட்டு

Published On 2022-07-03 09:35 GMT   |   Update On 2022-07-03 09:35 GMT
  • உலக சாதனை செய்வதற்கு மன தைரியம் அவசியம் என்றும், உனக்கு உடல் தைரியம் மன தைரியத்தோடு தலைமுடியும் உறுதியாக இருக்கிறது.
  • 1410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 10 செகண்டில் இழுத்துச் சென்று வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை படைத்தார்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் சம்யுத்தா. வயது 12. இவர் நேற்று தனது தலைமுடியில் 1410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 10 செகண்டில் இழுத்துச் சென்று வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பும் சில உலக சாதனை படைத்துள்ளார், தற்போதைய சாதனையை இந்திய அளவில் இவர் ஒருவர் மட்டுமே செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று உலக சாதனை புரிந்த மாணவி சம்யுத்தாவை நேரில் வரவழைத்து வாழ்த்திய தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன். மேலும் மாணவியிடம் பேசும் பொழுது இது போன்ற உலக சாதனை செய்வதற்கு மன தைரியம் அவசியம் என்றும், உனக்கு உடல் தைரியம் மன தைரியத்தோடு தலைமுடியும் உறுதியாக இருக்கிறது என்று பாராட்டி பொன்னாடை போர்த்தி காசோலை கொடுத்து வாழ்த்தி அனுப்பினார்.

இதல் மாணவியுடன் அவரது பெற்றோர் வெங்கடேஷ் மற்றும் ஆஷா தம்பதியினர், கராத்தே மாஸ்டரும் இந்த உலக சாதனை பயிற்சியாளருமான இளையராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பயிற்சியாளர் இளையராஜாவின் கோரிக்கையை ஏற்று விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

Tags:    

Similar News