உள்ளூர் செய்திகள்

கட்டுமான நல வாரியத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்யலாம்

Published On 2023-08-11 15:01 IST   |   Update On 2023-08-11 15:01:00 IST
  • குவாரிகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை கண்டறிந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரில் சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
  • முகாம்களில் ஆங்கிலம் மற்றும் வட மொழியில் (இந்தி) அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 தருமபுரி, 

தருமபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முத்து வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், சுரங்கம் மற்றும் குவாரிகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை கண்டறிந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரில் சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

மேற்படி முகாம்களில் ஆங்கிலம் மற்றும் வட மொழியில் (இந்தி) அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களான நடமாடும் மருத்துவ ஊர்தி வசதி, தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அரசு அமரர் ஊர்தி, தொடர்வண்டி அல்லது ஆகாயவிமானம் மூலம் எடுத்துச் செல்வதெனில் அதிக பட்சமாக ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியாக சம்மந்தப்பட்ட மாவட்ட ககர் வாயிலாக வழங்கப்படும்.

மேலும் பணியிடத்தில் விபத்து மரணம் ஏற்பட்டால் ரூ.5,00,000 அவரது வாரிசு தாருக்கு வழங்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

எனவே மேற்படி வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தனிநபர் ஆதார் எண், குடும்ப அட்டை நகல், வயதிற்கான ஆவணம், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் உள்ளிட்ட நகல்களுடன் tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாக தருமபுரி, தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப் பிக்கலாம் என தொழி லாளர் உதவி ஆணையர் முத்து தெரிவித்துள்ளார்.

Similar News