கோப்பு படம்
தேவதானப்பட்டியில் பைக் மீது கல்லூரி பஸ் மோதி வியாபாரி பலி
- வியாபாரி மோட்டார் சைக்கிளில் டி.வாடிப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார்.
- கல்லூரி பஸ் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து (வயது35). ஐஸ் வியாபாரி. இவருக்கு சந்தியா (33) என்ற மனைவியும், வீரலட்சுமி (15), அன்புலட்சுமி (12), தங்க லட்சுமி (10) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். 3 மகள்களும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
நேற்று மாலை மருதமுத்து மோட்டார் சைக்கிளில் டி.வாடிப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம் நோக்கி வந்த கல்லூரி பஸ் அவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மருதமுத்து படுகாயங்களுடன் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பஸ்சை ஓட்டி வந்த காமாட்சிபுரம் செல்லப்பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.