search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Merchant died"

    • வியாபாரி மோட்டார் சைக்கிளில் டி.வாடிப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார்.
    • கல்லூரி பஸ் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து (வயது35). ஐஸ் வியாபாரி. இவருக்கு சந்தியா (33) என்ற மனைவியும், வீரலட்சுமி (15), அன்புலட்சுமி (12), தங்க லட்சுமி (10) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். 3 மகள்களும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    நேற்று மாலை மருதமுத்து மோட்டார் சைக்கிளில் டி.வாடிப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம் நோக்கி வந்த கல்லூரி பஸ் அவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மருதமுத்து படுகாயங்களுடன் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பஸ்சை ஓட்டி வந்த காமாட்சிபுரம் செல்லப்பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலிக்கம்பட்டி பிரிவு அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்து வியாபாரி பலியானார்.
    • போலீசார் விபத்துகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேற்குநிரோத்தான் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(28). இவருக்கு லேகாபாய் என்ற மனைவியும், ஒரு பெண்குழந்தையும் உள்ளனர். காய்கறி வியாபாரியான கோபிநாத் சரக்கு வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தார்.

    கொடைரோடு சிப்காட்டிலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கோயமுத்தூருக்கு சரக்கு வாகனத்தை ஓட்டிச்சென்றார்.

    கலிக்கம்பட்டி பிரிவு அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த கோபிநாத் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த அம்பாத்துரை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    • பாளையத்தில் இருந்து வெள்ளியணை செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு வியாபாரி பலியானார்.
    • போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.கோம்பையைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 56). மாட்டு வியாபாரி. இவருக்கு திருமணமாகவில்லை.

    தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மாயமானார். இந்நிலையில் பாளையத்தில் இருந்து வெள்ளியணை செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் ஏட்டு ராஜேஸ்குமார் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×