என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திண்டுக்கல் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து வியாபாரி பலி
- கலிக்கம்பட்டி பிரிவு அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்து வியாபாரி பலியானார்.
- போலீசார் விபத்துகுறித்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேற்குநிரோத்தான் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(28). இவருக்கு லேகாபாய் என்ற மனைவியும், ஒரு பெண்குழந்தையும் உள்ளனர். காய்கறி வியாபாரியான கோபிநாத் சரக்கு வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தார்.
கொடைரோடு சிப்காட்டிலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கோயமுத்தூருக்கு சரக்கு வாகனத்தை ஓட்டிச்சென்றார்.
கலிக்கம்பட்டி பிரிவு அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த கோபிநாத் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த அம்பாத்துரை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






