உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறை - திருநெல்வேலி ரெயில் ஆலக்குடி, அய்யனாபுரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2022-09-22 10:15 GMT   |   Update On 2022-09-22 10:15 GMT
  • பயணம் செய்யும் பயணிகள் அதிக கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • பூதலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை.

பூதலூர்:

தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டு கால கொரோனா நோய் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் ஓட துவங்கி உள்ளன.

தஞ்சை -திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரெயில்களும் வழக்கம் போல ஓடிக்கொண்டு உள்ளன.

பாசஞ்சர் ரெயில்களிலும் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுமட்டும் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நீண்ட தூர பயணம் செய்ய ரெயில் பயணம் வசதியாக இருப்பதால் கட்டண உயர்வை பயணிகள் பொருட்படுத்தவில்லை.

அதே சமயம் குறைந்த தூரம் பயணம் செய்யும் பயணிகள் அதிக கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா‌நோய் தொற்று காரணமாக ரெயில் கள் நிறுத்தப்படுவதற்கு முன்பு மயிலாடுதுறை -திருநெ ல்வேலி பாசஞ்சர் ரெயில் ஆலக்குடி, அய்யனாபுரம் ஆகிய ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.

தற்போது இந்த இரண்டு ரெயில் நிலையத்தில் மயிலாடுதுறை -திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில் நிற்பதில்லை.மதிய நேரத்தில் திருச்சி செல்ல ரெயில் இல்லாததால் இந்த பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.

மயிலாடுதுறை-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில் ஆலக்குடி, அய்யனாபுரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும் என்று ரெயில் பயணிகள் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல திருச்செந்தூர் -சென்னை விரைவு ரெயில் பூதலூர் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர் செல்லும் போது நின்று செல்கிறது.

மறு மார்க்கத்தில் சென்னை செல்லும் போது பூதலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை.

பூதலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் செல்பவர்கள் திரும்பி வரும்போது திருச்சியில் இறங்கி காத்திருந்து வேறு பிளாட் பார்ம்‌சென்று ரெயில் ஏற வேண்டிய நிலை உள்ளது. திருச்செந்தூர் விரைவு ரெயில் சென்னை செல்லும் போது பூதலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News