உள்ளூர் செய்திகள்

மத்தூர் பேருந்து நிலையத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-15 09:26 GMT   |   Update On 2022-12-15 09:26 GMT
  • அம்மா உணவகங்கள் மினி மருத்துவமனைகள் மூடல் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மத்தூர் பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, தேவராசன் ஆகியோர் தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து விலைவாசி உயர்வான பால் விலை, சொத்துவரி மின் கட்டண உயர்வு, அம்மா உணவகங்கள் மற்றும் மினி மருத்துவமனைகள் மூடல் உள்ளிட்டவை குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளரும், மாவட்ட எம் ஜி.ஆர்.மன்ற செயலாருமான எஸ்.தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதில் மாவட்ட சிறுபாண்மை பரிவு இணை செயலாளர் பியாரே ஜான், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தி, கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல், சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், இராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், வாலிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா சுந்தரேசன், உள்ளிட்ட நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News