உள்ளூர் செய்திகள்
நிலத்தகராறில் வாலிபரை தாக்கியவர் கைது
- சீனிவாசனை, அவர்கள் 4 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்வண்ணனை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது35). வசந்த்நகரை சேர்ந்த பொன்வண்ணன், பவித்ரன், மாதேஸ், சீனிவாசன். இவர்களுக்கும், சேகருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று சீனிவாசனை, அவர்கள் 4 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த சேகர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்வண்ணனை கைது செய்தனர்.