உள்ளூர் செய்திகள்
கோவையில் கார் டிரைவரை தாக்கியவர் கைது
- போலீசுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதியதால் தாக்குதல்
- பீளமேடு போலீசார் சாமிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்
பீளமேடு,
கோவை காளப்பட்டி, நேரு நகரை சேர்ந்தவர் அஜய் (வயது36). இவர் கோவையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நீலம்பூரை சேர்ந்த சாமிநாதன் (52) என்பவர் மீது பீளமேடு போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதில் அஜய் சாட்சியாக உள்ளார். எனவே அவர் போலீசுக்கு ஆதரவாக செயல்படுவதாக சாமிநாதன் கருதி வந்தார்.இந்த நிலையில் அஜய் சம்பவத்தன்று டைட்டல் பார்க் அருகே காரை நிறுத்தி விட்டு சவாரிக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த சாமிநாதன் காருக்குள் இருந்த அஜயை வெளியே இழுத்து வந்து தகாத வார்த்தைகள் பேசி காலால் எட்டி உதைத்து தாக்கினார். இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சாமிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.