உள்ளூர் செய்திகள்
கோவில் வளாகத்தில் இறந்து கிடந்தவரை படத்தில் காணலாம்
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் ஆண் பிணம்
- திசையன்விளை வடக்கு தெருவில் உள்ள சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- உயிரிழந்தவர் காவி நிற வேட்டியும், வெளிர் மஞ்சள் நிற அரை கை சட்டையும் அணிந்திருந்தார்.
திசையன்விளை:
திசையன்விளை வடக்கு தெருவில் உள்ள சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் காவி நிற வேட்டி யும், வெளிர் மஞ்சள் நிற அரை கை சட்டையும் அணிந்திருந்தார். மேலும் அவர் வண்ண பூ போட்ட கம்பளி போர்வையும் போர்த்தியவாறு கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.