உள்ளூர் செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எந்த கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை

Published On 2022-08-17 06:40 GMT   |   Update On 2022-08-17 06:40 GMT
  • திருப்பரங்குன்றம், விருதுநகர், சிவகாசி பகுதிகளின் எந்த கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை/
  • மாணிக் தாகூர் எம்.பி குற்றச்சாட்டினார்.

திருமங்கலம்

திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணிக் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார். மருத்துவமனையில் அடிப்படை வசதிகள், நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கள்ளிக்குடி தாலுகாவாக மாறி 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படவில்லை. தாலுகாவாக மாறுவதற்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களே இன்று வரை உள்ளது.

இந்திய அரசியல் வரலாற்றில் எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒன்றை மோடி செய்திருக்கிறார். சுதந்திர தின விழா மேடையில் குடும்ப அரசியல் குறித்து பேசி இருக்கிறார். அது உண்மையிலேயே மற்றவர்களுக்காக சொன்னதா? அல்லது அமித்ஷாவின் மகன் குறித்து பேசினாரா? என்பது தெரியவில்லை.

தமிழிசை சவுந்தராஜன், பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தபோது கூட அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் நடைபெற்றதில்லை. அண்ணாமலை பொறுப்பேற்ற பின்பு தான் பா.ஜ.க. அரசியலில் அநாகரிகமான செயல்கள் நடைபெறுகிறது.

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் பலமுறை பேசி உள்ளோம். ஆனால் அமைச்சரவை அலுவலகம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி இந்த கோரிக்கையை புறக்கணிக்கிறது.

அதே போல் திருமங்கலம், திருப்பரங்குன்றம், விருதுநகர், சிவகாசி பகுதிகளின் எந்த கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதற்கு சாட்சியாக கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது.

திருமங்கலம், சிவகாசியில் சென்னை ெரயிலை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அதையும் மத்திய அரசு நிராகரிக்கிறது. இது தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படும் இ்வ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News