குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை
- அவனியாபுரத்தில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- திருமணமாகி 2 ஆண்டில் முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
மதுரை
அவனியாபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் 108 ஆம்புலன்சில் மெடிக்கல் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 23). 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகனும், பிறந்து 7 மாதமே ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று இரவு முத்துலட்சுமி பக்கத்து வீட்டில் டி.வி. பார்த்துள்ளார்.
அப்போது சதீஷ்குமார் மீன் வாங்கி வந்து அதனை சமைத்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு முத்து லட்சுமி மறுத்துள்ளார். இதில் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த முத்துலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய புகாரின் பேரில் அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார். திருமணமாகி 2 ஆண்டில் முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்த சம்பவம் அவனியாபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.