உள்ளூர் செய்திகள்

ரெப்கோ வங்கி மதுரை கிளையில் சிறப்பு கடன் முகாம் நடந்தது.

ரெப்கோ வங்கியில் சிறப்பு கடன் முகாம் தொடக்கம்

Published On 2022-12-06 14:14 IST   |   Update On 2022-12-06 14:14:00 IST
  • மதுரை ரெப்கோ வங்கியில் சிறப்பு கடன் முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
  • மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதமும், மற்றவர்களுக்கு 7.40 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

மதுரை

ரெப்கோ வங்கி மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த வங்கி மேலாண்மை இயக்குநர் இஸபெல்லா தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது. இந்த வங்கியின் மதுரை கிளையில் சிறப்பு கடன் முகாம் தொடங்கியது.

முகாமை டாக்டர் தேவசங்கர், டாக்டர் பிரமில்டா, வங்கியின் சட்ட ஆலோசகர் சரவணன் மற்றும் வங்கியின் இணை பொது மேலாளர் சண்முகம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த முகாம் 5-1-2023 வரை நடைபெறுகிறது. இந்த காலத்தில் சேவை கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் தங்க நகைக்கடன் கிராம் ஒன்றுக்கு ரூ. 3,900 வரை வழங்கப்படுகிறது.

வங்கியின் 54-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு டெபாசிட் திட்டமும் அமலில் உள்ளது. இதில் மிக மூத்த குடிமக்களுக்கு 7.90 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதமும், மற்றவர்களுக்கு 7.40 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

முகாம் தொடக்க விழாவை மேலாளர் நாகசூர்ய புனிதா தொகுத்து வழங்கினார். முடிவில் உதவி மேலாளர் ஜோயல் நன்றி கூறினார். மதுரையில் உள்ள கிளைகளான பீ.பி.குளம், வில்லாபுரம் மற்றும் மேலூர் கிளைகளிலும் இந்த சிறப்பு கடன் முகாம்கள் நடைபெறுகிறது.

Tags:    

Similar News