உள்ளூர் செய்திகள்

வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

Update: 2022-08-18 07:39 GMT
  • திருமங்கலம் அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியானார்.
  • இருசக்கர வாகனத்தில் வேலைக்காக பாப்பநாயக்கன்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ராம்முன்னி நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது37). இவரது மனைவி சங்கரேஸ்வரி.

துரைராஜ் தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வேலைக்காக பாப்பநாயக்கன்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல்(45) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், துரைராஜ் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் துரைராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலே பலியானார்.

இச்சம்பவம் குறித்து துரைராஜ் மனைவி சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் மீது டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News